மூன்றரை வருடங்களுக்கு மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும் – சகாதார அமைச்சர்

எதிர்வரும் மூன்றரை வருட காலத்திற்கு மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ்வதற்கு பழகிக்கொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சில காலத்திற்கு வைரஸ் காணப்படும் என்பதால் இலங்கை அதனை எதிர்கொள்வதற்கான தனது அணுகுமுறையை மாற்றும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய அனில் ஜெயசிங்கவையும் சுகாதார அமைச்சின் பேச்சாளராக பணியாற்றிய வைத்தியர் ஜெயருவன் பண்டாரவையும் தான் பதவி நீக்கியதாக கூறப்படுவதை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts