மூதாட்டியை தாக்கி, பணம் நகை அபகரிப்பு

நவாலி பகுதியில் வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கிவிட்டு அவரிடமிருந்து 5 பவுண் நகை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் பணம் என்பன செவ்வாய்க்கிழமை(30) இரவு திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார், புதன்கிழமை (01) தெரிவித்தனர்.

இதில் படுகாயமடைந்த நவரட்ணம் விஜயதேவி (வயது 71) என்ற மூதாட்டி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.

மேற்படி வீட்டில் மூதாட்டியும், அவருடைய உதவியாளர் ஒருவரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (30) உள்நுழைந்தவர்கள், உதவியாளாரை கட்டிவைத்து, மூதாட்டியை கடுமையாக தாக்கி, பணம் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.