முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் தடை- கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி உட்பட ஏனைய பாதைகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் கிராமத்துக்கு பயணிப்போரை வேறு பாதையொன்றினை பயன்படுத்துமாறு இராணுவத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடுகை செய்வதற்காக நேற்று (புதன்கிழமை) பொது நினைவுக்கல் ஒன்று கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த செயற்பாட்டினை தொடர்ந்தே, முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழைய இராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor