முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதலை நடத்தவில்லை என்கின்றது இராணுவம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த உண்மைகள் திருபுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் இராணுவத் தலைமையகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

இராணுவ வீரர்களுடன் பேசியவாறு பின்னோக்கிச் சென்றவேளை, ஊடகவியலாளர் தனது மோட்டார் சைக்கிளின் மீது மோதி, கம்பி வேலி பொருத்தப்பட்டிருந்த இடத்தில் விழுந்தார் என இராணுவம் கூறியுள்ளது.

இதனை அடுத்து அங்குவந்தவர்களினால் வீதியோரத்திலுள்ள பெயர் பலகையை படமெடுக்கும் போது இராணுவ வீரர்களால் அவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார் எனக் கூறும் அளவுக்கு வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டன என்றும் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் முட்கம்பியால் சுற்றப்பட்ட பனைக் குச்சியால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் எனவே சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் விடுக்கப்பட்ட அழைப்பு தவறானது என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்களுக்கு இடையில் உள்ள ஆரோக்கியமான நல்லிணக்கம் இருப்பதாக தெரிவித்துள்ள இராணுவம் இவ்வாறான சம்பவங்களை கொண்டு ஏமாறவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor