முன்னாள் போராளிகள் விவகாரம்: ஐநாவுக்கு மனு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் விடயம் குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழக்கறிஞர்கள் அமையத்தினால் (Tamil Lawyers’ Forum) இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் மற்றும் வைத்தியர்கள் அடங்களாக இந்த குழுவை நியமிக்குமாறு, அவர்கள் கோரியுள்ளனர்.

சில இரசாயனங்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கலந்திருப்பதை சாதாரண பரிசோதனைகள் மூலம், வைத்தியர்களால் கண்டறிவது கடினம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே வைத்தியப் பின்னணி கொண்ட விஞ்ஞானிகள், நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்களாக குறித்த குழுவை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor