முன்னாள் போராளிகளை பதிவுசெய்யுமாறு வடக்கு மாகாணசபை அறிவித்துள்ளது!

வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் தமது விபரங்களைப் பதிவுசெய்யுமாறு முன்னாள் போராளிகளிடம் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக வெளிவரும் தகவல்களையடுத்து வடக்கு மாகாண சபையால் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் 12ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியுள்ளனர். இவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

புனர்வாழ்வின்போது தமக்கு வலுக்க்லட்டாயமாக ஊசி மருந்து ஏற்றப்பட்டுள்ளதாக முன்னாள் போராளிகளே நல்லிணக்க ஆணைக்குழுமுன் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. முன்னாள் போராளிகள் பாதிக்கப்பட்டிந்தால் அவர்களை மீட்டெடுக்க மருத்துவ பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டியதும் அவசியம் எனவும் அவர் கூறினார்.

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இதற்காக அவர்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் தற்போது நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் எமது வைத்தியர்களைக் கொண்டு பரிசோதிக்கமுடியும். தேவையானால் வெளிநாட்டு வைத்திய நிபுணர்களின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor