முன்னால் போராளியின் கொலைக்கு மன்னார் ஆயர் கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் அவரின் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

mannar-ayar

கடந்த கால கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் மனதில் ஆயுததாரிகள் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

“இந்நாட்டில் இன்று நீதி தோற்றுப் போய்விட்டது. நீதிக்குப் புறம்பான செயல்கள்தான் தற்போதைய ஆட்சி யில் நடைபெறுகின்றன. இந்நிலையில் ஆயுததாரிகளும் தமது அராஜகங்களை சுதந்திரமாக அரங்கேற்றி வருகின்றனர்” என்றும் அவர் கூறினார்.

“எனவே சர்வதேச சமூகம்தான் இந்த அராஜகங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழருக்கு நீதியை – விடுதலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” – என்று மன்னார் ஆயர் மேலும் தெரிவித்தார்.