முதியோர் தின வினாடிவினாப்போட்டி

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முதியோர் தினத்தினை முன்னிட்டு ‘முதியோரைக் கனம் பண்ணுதல்’ என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்று வரும் வினாடிவினாப் போட்டியின் யாழ்.மாவட்ட ரீதியிலான போட்டி யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்றது.

elders

உலக முதியோர் தினம் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் மேற்படி வினாடிவினாப் போட்டி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இதில், யாழ்.மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த, 5 பேர் கொண்ட தலா ஒவ்வொரு குழுக்கள் இந்தப் போட்டியில் பங்குபற்றியது.

இதில், புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தினைப் பெறும் குழு தேசிய மட்ட முதியோர்களுக்கிடையில் இடம்பெறும் வினாடிவினாப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார்.