முதலமைச்சருக்கு கோத்தபாய திடீர்த் தூது

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்‌ஷ திடீர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசனை இதற்காக அவர் தூது அனுப்பியுள்ளார்.

வடக்கு மாகாணசபைக்கும் கொழும்பு அரசுக்கும் இடையிலான முரண்நிலையைத் தீர்ப்பதற்காக வடக்கு முதல்வருடன் யாழிற்கு வந்து பேசவும் தயாராக இருக்கிறார் என்று பாதுகாப்பு செயலாளர் வடக்கு முதலமைச்சருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.