மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விரைவில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம், மக்கள் மீள்குடியேறவேண்டிய பகுதிகள் மற்றும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் ஆகியோரைப் பார்வையிடுவதற்காக அவர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் அவசியம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதற்கிணங்க, மீள்குடியேற்ற அமைச்சர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.