மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று கூட்டுப்பிரார்த்தனை

வலி.வடக்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சபாபதி நலன்புரி முகாமில் கூட்டுப்பிரார்த்தனை ஒன்றினை இன்று மேற்கொள்ள உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

தங்களுடைய சொந்த நிலங்களில் குடியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்று பிற்பகல் 3 மணிக்கு சபாபதி நலன்புரி முகாமில் கூட்டுப் பிரார்த்தனை ஒன்றினை மக்கள் முன்னெடுக்கவுள்ளனர்.

இதேவேளை இன்று 11மணியளவில் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் வழங்கவுள்ளனர்.

எனினும் குறித்த நிகழ்வினை மேற்கொள்ள ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் இராணுவ புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தப்பட்டு அது தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.