மீண்டும் அண்ணன் சிம்பு படத்தில் தம்பி குறளரசன்

சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்துக்கு இசையமைத்த சிம்புவின் தம்பி குறளரசன் மீண்டும் அண்ணனின் படத்துக்கு இசையமைக்கிறார்.

simbu-kural-arasan

இது நம்ம ஆளு படம் தாமதமானதற்கு குறளரசன் டியூன்களை சரியான நேரத்தில் தராததும் ஒரு காரணம். பின்னணி இசை சேர்ப்பிலும் தாமதம் ஏற்பட்டது. அதன் காரணமாக படத்தின் முதல் டீசரை பின்னணி இசை இல்லாமல் பாண்டிராஜ் வெளியிட்டார். பாண்டிராஜும், குறளரசனும் இசை மற்றும் பாடல்கள் விஷயத்தில் நேரடியாகவே மோதிக் கொண்டனர்.

இந்நிலையில் மீண்டும் சிம்பு படத்துக்கு குறளரசன் இசையமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் மீண்டும் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார். டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு குறளரசன் இசையமைக்க உள்ளதாக தகவல். அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களுக்குப் பிறகு இந்தப் படம் தொடங்கப்பட உள்ளது.

Recommended For You

About the Author: Editor