மீசாலையில் கோரவிபத்து- ஒருவர் படுகாயம்

மீசாலையின் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் முன்னால் சென்ற லான்மாஸ்ரர் வாகனத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் லான்மாஸ்ரரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.