மின்னல் தாக்கி ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் மன்னார் வீதியில் (ஏ – 32) சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் மின்னல் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (22) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழங்காவிலைச் சேர்ந்த எஸ்.டினேஸ் என்பவரே மின்னல் தாக்கத்துக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டு முழங்காவிலுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இவர், மின்னல் தாக்கத்துக்குள்ளாகியுள்ளார்.

மின்னல் தாக்கி வீதியில் கிடந்த இவரை அவ்வழியாக வாகனத்தில் வந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor