மின்சாரம் தாக்கி இளைஞன் படுகாயம்

திருநெல்வேலி பகுதியில் கட்டட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

பாடசாலை வீதியில் நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இராகவன் ரஞ்சித்குமார் (வயது 19) என்ற வசாவிளானைச் சேர்ந்த இளைஞரே மின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

மாடிக் கட்டடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கட்டடத்தொழிலாளியின் கையிலிருந்த இரும்பு அருகிலிருந்தமின் கம்பியில் பட்டதனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.