மாவை எம்.பி மயங்கிச் சரிந்தார்!

மட்டக்களப்புக் கல்லடியில் பொது நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி. திடீரென மயங்கிச் சரிந்தார்.

mavai mp

எனினும் அருகில் இருந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் அவரை சரியவிடாமல் தாங்கிப் பிடித்துக் கிடத்தினர்.

சற்று நேரத்தில் ஆசுவாசப்படுத்தியதன் பின்னர் அவர் வழமை நிலைக்குத் திரும்பினார் எனக் கூறப்பட்டது. கல்லடி துளசி மண்டபத்தில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றில் சுமார் 45 நிமிட நேரம் உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்திலேயே மாவை எம்.பி. மயங்கிச் சரிந்தார்.

அச்சமயம் அருகில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், அரியநேந்திரன், சுமந்திரன், செல்வராஜா மற்றும் மகாண சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர். மாவை எம்.பி. சுமுக நிலைக்கு வந்ததை அடுத்து கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஏனைய பிரமுகர்கள் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகின்றனர்.

Related Posts