மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ்!

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்றார்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்கு நேற்றய தினம் (12) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் பூசை வழிபாடுகளில் பங்கேற்றிருந்தார்.

அத்துடன் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக சேதமடைந்திருந்த இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன்புனரமைப்புப் பணிகளையும் பார்வையிட்ட அமைச்சர் அவர்கள் அதுதொடர்பிலும் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

இதனிடையே கோயிலின் பிரதம குருக்களின் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் அவர்கள் குருக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

te1

te4

te5