மாநகர சபைக்கு புதிய தீயணைப்பு இயந்திரம்

யாழ்.மாநகர சபைக்கு நவீன வசதிகள் கொண்ட 50 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய தீயணைப்பு இயந்திரம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் கொழும்பில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (29) வழங்கப்பட்டுள்ளது.

bowser

இதனை, யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா நேரில் சென்று, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவிடம் பெற்றுக்கொண்டார்.

மேற்படி தீயணைப்பு இயந்திரம் 4 ஆயிரம் லீற்றர் நீர்க் கொள்வனவைக் கொண்டதாகும். மேலும், அதனுடன் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தண்ணீர் பவுஸரும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 8 மில்லியன் ரூபாய் பெறுமதி கொண்ட பிக்கப் வாகனம் யாழ்.மாநகர சபைக்கு மேற்படி அமைச்சால் வழங்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.