மாணவியை கடத்திய சிப்பாய் கைது

பாடசாலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய மாணவி ஒருவரைக் கடத்திச் சென்ற இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிங்கிரிய – வெல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி பாடசாலையில் இடம்பெற்ற மேலதிக வகுப்பு ஒன்றிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வேலை மாதம்பை பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளிலேயே குறித்த சிறுமியை சந்தேகநபர் கடத்தியுள்ளார்.

பாடசாலையில் மேலதிக வகுப்புக்குச் சென்ற மகள் கடத்தப்பட்டுள்ளதாக பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து நேற்று இரவு மாதம்பை – மெதகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான இராணுவ சிப்பாய் காங்கேசன்துறை இராணுவ முகாமில் பணியாற்றிய மாதம்பை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவரை சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் இரண்டு வருடங்களாக குறித்த இராணுவ சிப்பாயுடன் தனக்கு காதல் தொடர்பு இருப்பதாகவும் இதனாலேயே அவருடன் தான் சென்றதாகவும் சம்பந்தப்பட்ட சிறுமி பொலிஸில் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor