மாகாண சபை எமக்கு எதுவும் செய்யவில்லை – முதல்வர்

வடக்கு மாகாண சபை எங்களுக்கு எதனையும் செய்யவில்லை என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். மாநகர சபையின் விசேட கூட்டம் நேற்று சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதன்போது தொலைபேசிக் கட்டணங்களை வழங்கவில்லை என உறுப்பினர்கள் இருவர் சபையில் முன்வைத்தனர்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே முதல்வர் மேற்கண்டாறு குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் தங்களுக்கான தொலைபேசிக் கட்டணம் இன்னமும் வழங்கப்படவில்லை என எனக்கு அறிவித்திருந்தனர்.

அதனையடுத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரனுக்கு எழுத்து மூலம் தெளிவுபடுத்தினேன்.

எனினும் இதுவரை எமக்கு அதற்கான பதில் அனுப்பப்படவில்லை.

அத்துடன் உள்ளூராட்சி அமைச்சு கவனக்குறைவானதாக இருக்கின்றது. இந்த விடயம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதிநிதிகளை சந்தித்திப்பதற்கோ அல்லது தொலைபேசியில் பேசவோ முடியாத நிலை காணப்படுகின்றது.

இது ஒரு பெரிய பிரச்சினை . இந்த நிலை மாற்றப்படவேண்டும். மேலும் தற்போது இருக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு வடக்கு மாகாண சபை தீர்மானம் எடுத்து உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக எமக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அதன்படி வடக்கு மாகாண சபை எமக்கு அதிகாரம் தந்தால் நாம் காலம் தாழ்த்தாது தேவையானவற்றை வழங்குவோம் . எனினும் மாகாண சபை எமக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor