மாகாண கைத்தொழில் கண்காட்சி யாழில் இன்று

வடமாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாணக் கைத்தொழில் கண்காட்சி இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

open-vicky-2

open-vicky

இந்தக் கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கைத்தறி நெசவு உற்பத்திப் பொருட்கள் ,மட்பாண்ட உற்பத்திப் பொருட்கள்,சிற்பியிலான கைப்பணிப் பொருட்கள்,பனை தெங்கு சார் உற்பத்திப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டதுடன் இக்கண்காட்சி இன்றும் நாளையும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்நிகழ்வுக்கு பிரதம செயலாளர் விஜயலட்சுமி,வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்திய சீலன் மற்றும் கைத்தொழில் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.