எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 14 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.