முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றுமொரு வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவவீரர்கள் 10 பேருக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு சம்பளத்தை வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அவரை குற்றமற்றவர் என்று இனங்கண்டே நீதிமன்றம் அவரை இன்று திங்கட்கிழமை (09) விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரத்தியேக செயலாளரான சேனக்க ஹரிப்பிட்டிய என்பவரையும் குற்றமற்றவர் என இனங்கண்ட நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.