மருத்துவமனை கன்ரீனுக்கு மிக அருகில் மலசலகூடம்; பொதுமக்கள் கடும் விசனம்

சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரத் திணைக்கள மருத்துவமனை சிற்றுண்டிச் சாலைக்கு அருகில் மலசல கூடம் அமைத்துள்ளமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

சாவகச்சேரி மருத்துவமனை வளாகத்தில் பார்வையாளர் மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது இந்த மண்டபத்துடன் இணைந்து மலசலகூடமும் அமைக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை சிற்றுண்டிச் சாலைக்கு முன்பாக மிக அண்மையில் (10 அடி தூரத்தில்) மல சலகூடம் அமைக்கப்படுவதால் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் சுகாதாரத்திற்குப் பங்கம் ஏற்படமாட்டாதா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor