மருதனார் மடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

accidentமருதனார்மடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

மருதனார்மடம் சந்திக்கு அருகில் காங்கேசன்துறை வீதியில் வாகனங்களை திருத்தும் காரஜ் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றுடன் அந்த வழியாக வந்த ஹைஏஸ் வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்தில், ஹைஏஸ் வாகனத்தில் பயணித்த பண்டத்தரிப்பைச் சேர்ந்த ப.பயஸ் (வயது-53) என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஹைஏஸ் வாகனச் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளை சுன்னாகம் பெலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.