மன்னார் வைத்தியசாலை கோரோனா பிரிவின் தாதியர்கள் பலர் சுகயீன லீவு!!!

மன்னார் பொது வைத்தியசாலையில் கோரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளோரை கண்காணித்து பிசிஆர் பரிசோதனை முன்னெக்கப்பட்டும் நோயாளர் விடுதியில் கடமைக்கு அமர்த்தப்பட்ட 13 தாதிய உத்தியோகத்தர்களில் 7 பேர் விடுப்பில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதனால் 6 தாதிய உத்தியோகத்தர்கள் மட்டும் கடமையில் இருப்பதால் பணிச் சுமை அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையில் கோரோனா அறிகுறியுடன் சேர்க்கப்படுபவர்களை கண்காணிக்கவும் பிசிஆர் பரிசோதனையை முன்னெடுக்கவும் தனி நோயாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த விடுதியில் 13 தாதிய உத்தியோகத்தர்களுக்கு கடமை வழங்கப்பட்டது. அவர்களில் 7 சுகயீன விடுப்பு அறிவித்துவிட்டு கடமைக்கு சமூகமளிக்காமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் 6 தாதிய உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமையில் இருப்பதால் அவர்களுக்கு பணி சுமை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நோயாளர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நாடுமுழுவதும் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஓய்வின்றி பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடு இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே மாகாண அதிகாரிகள், இந்த விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor