மனைவியை வெட்டி கொன்ற கணவன்! மாமன்,மாமியையும் வெட்டி தானும் தற்கொலை!

knife-axe-muder-vaalகுடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற ஒருவர் தனது மாமன் மாமியையும் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் வவனியா மாகாரம்பைக்குளத்தில் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தில் ரா.அமுதா (வயது-38) என்பவர் வெட்டிப் படுகொலை செய்ப்பட்டுள்ளார்.

இவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வீ.வெள்ளைச்சாமி (வயது-65), இவரது மனைவியான வெ.கிருஸ்ணவேணி(வயது-55) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தனது மனைவியை கோடரியால் வெட்டி படுகொலை செய்து, மாமன் மாமியையும் படுகாயப்படுத்தினார் என்று சந்தேகிக்கப்படுபவரான செ.ராசேந்திரன் (வயது-45) என்பவர் தனது வீட்டுக்கு மூன்று கிலோ மீற்றர் தொலைவில் காத்தார் சின்னக்குளம் பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சடலத்தை வவுனியா பொலிஸார் மீட்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அத்துடன் மேலதிக விசாரணைகளையும் நடத்திவருகின்றனர்.