மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் குறித்து மஹிந்த அதிருப்தி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

mahintha

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 69ஆவது அமர்வில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐ.நா மனித உரிமை பேரவையினால் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் இலங்கை மீது மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணை ஒழுங்கற்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்றது.

போருக்கு பின்னர் இலங்கை துரதிஸ்டவசமான தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. புனரமைப்பு, புனர்வாழ்வு,நல்லிணக்கம், ஆகியவை வேண்டா வெறுப்பாக சில தவறான நிகழ்ச்சி நிரலின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இது ஒரு தூரதிஷ்வசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.