மடு மாதா ஆலய திருவிழாவை நோட்டமிட்ட மர்ம விமானம்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை பக்தர்கள் கூடி நின்ற ஆலயத்தின் முன் பகுதி மேல் வானில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்தது.

camara_plane_I

குறித்த சிறிய ரக விமானத்தின் மேல் பகுதியில் நான்கு விசிறிகள் சுற்றிக்கொண்டிருந்த நிலையில் குறித்த விமானம் குறிப்பிட்ட ஒரு பகுதியை மையப்படுத்தியே சுற்றிக்கொண்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இரைச்சலுடன் சுற்றிக்கொண்டிருந்த குறித்த விமானம் மடுத்திருவிழா திருப்பலி நிறைவடைந்த பின் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றதை காணக்கூடியதாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த சிறிய ரக விமானம் எதற்காக ? யாரால் பறக்கவிடப்பட்டது? என்ற விடயம் இதுவரை தெரியவில்லை. –

Recommended For You

About the Author: Editor