மக்களை பாதிக்காத வகையில் இரணைமடுத்திட்டம் முன்னெடுக்கப்படும்: இரா.சம்பந்தன்

sambanthan 1_CIகிளிநொச்சி மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்காத வகையில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் முன்னெடுக்கப்படும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இரணைமடுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் புதன்கிழமை (நேற்று) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

‘கிளிநொச்சி இரணைமடுக்குளத்திலிருந்து கிளிநொச்சி மக்களை பாதிக்காத வகையில் இரணைக்குடிநீர்த் திட்டத்தினை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்.

கிளிநொச்சி விவசாயிகளையும் மக்களையும் பாதிக்காத வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும்.

அத்துடன், முரண்பாடுகள் ஏற்படும் போது அபிவிருத்தி விடயங்களை மேற்கொள்ளாமலும் இருக்கமுடியாது’ எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Related Posts