மகாஜன, அருணோதயா கல்லூரி மாணவர்கள் சாதனை

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுநர் கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி வீராங்கனை ஜே.அனித்தா சாதனை படைத்துள்ளார்.

Magajana-student

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மேற்படி போட்டியில் 18 வயதுப் பெண்கள் கோலூன்றிப் பாய்தலில் 3.00 மீற்றர் உயரம் பாய்ந்து அனித்தா இந்தச் சாதனையினை நிகழ்த்தியுள்ளார்.

முன்னர் இருந்த 2.95 மீற்றர் பாய்ந்து சாதனையினை இவர் முறியடித்துள்ளார்.

arunothaya-student

இதே வேளை ஆண்கள் பிரிவில் யாழ்.அளவெட்டி அருணோதயா கல்லூரியை சேர்நத மாணவனான கருணாகரன் நத்தலின் ஜோய்ஸன் கோலூன்றிப் பாய்தலில் 3.96 மீற்றர் பாய்ந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts