போலி நாணயத்தாள்: நால்வருக்கு விளக்கமறியல்

வடமராட்சி கிழக்கு பகுதியில் போலி நாணயத்தாளை அச்சடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை,பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி கந்தசாமி, சனிக்கிழமை (21) மாலை உத்தரவிட்டார்.

வல்வெட்டித்துறை விடுதி ஒன்றில் வௌ்ளிக்கிழமை போலி நாணயத்தாளை வழங்க முற்பட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

நால்வரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இதன் பிரதான சந்தேக நபர் சனிக்கிழமை (21) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நால்வரையும் சனிக்கிழமை மாலை நீதிவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியபோது, இந்த விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related Posts