போரால் பாதிக்கப்பட்டு கண்களை இழந்த முன்னாள் போராளிகள் 100 பேருக்கு வெள்ளைப் பிரம்புகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

யாழ்.வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ். நகரப் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர்களினால் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த வெள்ளைப் பிரம்புகள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ். வணிகர் கழக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த விழிப்புலனற்றோர் சங்கத்தில் உள்ள 295 பேரில் முதல் முறையாக 100 பேருக்கு குறித்த வெள்ளைப்பிரம்புகள் வழங்கி வைக்கப்பட்டன.
போரால் பாதிக்கப்பட்டு இரு கண்களையும் இழந்தவர்களுக்கு, ஒரு கண்ணை இழந்து விழிப்புலனற்றவர்களாக உள்ளவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், வணிகர் கழகத்தினால் யாழ்.நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குறித்த வெள்ளைப்பிரம்புகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
இந்த நிகழ்வில், யாழ். வணிகர் கழகத்தின் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், விழிப்புலனற்றோர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.