பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட முற்பட்டவர் கைது

arrestஅச்செழுப் பகுதியிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் இன்று வியாழக்கிழமை (07) பகல் திருடுவதற்கு முயற்சித்த, பொம்மவெளிப் பகுதியைச் சேர்ந்த 24 வயது சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறுகையில்,

மேற்படி பொலிஸ் உத்தியோகத்தரும் மனைவியும் வெளியிடத்துக்குச் சென்றிருந்த வேளை, அவர்களது மகள் வீட்டில் தனியே இருந்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி சந்தேகநபர் வீட்டின் கூரை ஓடு வழியாக உள்நுழைய முயற்சித்த வேளையில், தடுமாறிக் கீழே வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, வீட்டிலிருந்த மகள் கூக்குரலிடவே அங்கு கூடிய பொதுமக்கள், சந்தேகநபரைப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக அச்சுவேலிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.