பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா ஐ?

ஐ படம் என்றாலே எல்லோருக்கும் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு தான், ஏனென்றால் அப்படத்தில் நிறைய பிரம்மாண்டங்கள் இருக்கிறது.

shankar vikram new movie 'I' First look advertisements posters

இப்படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக நாம் அறிந்திருப்போம். அதற்கேற்றார் போல் ஐ படம் பாதி தியேட்டர்கள் புக் செய்துவிட்டதாகவும் நாம் சமீபத்தில் போஸ்டர்களை பார்த்திருப்போம்.

ஆனால் தற்போது ஐ படம் மூன்று காரணங்களுக்காக பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்குவதாக தகவல்கள் வந்திருக்கிறது.

ஐ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருந்தது. தெலுங்கில் சங்கராந்தி அன்று ஏற்கெனவே நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. அதேபோல் ஹிந்தியிலும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.

எனவே இந்நேரத்தில் படத்தை வெளியிட்டால், படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்காது என்பதாலும், நிறைய தியேட்டர்கள் கிடைக்காது என்பதற்காகவும் பொங்கல் ரேஸில் இருந்து ஐ விலகுவதாக கூறப்படுகிறது.