பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!!

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 6,000 பேருந்துகள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளன.

இதேவேளை இன்று முதல் 152 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன், நெடுந்தூர ரயில்கள் நவம்பர் 5 ஆம் திகதி முதல் இயக்கப்படும் என்று போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் – இறம்புக்கணை – புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.

கடுமையான நிபந்தனைகளுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பயணிகளும், பொது போக்குவரத்து சேவை சாதனங்களின் நடத்துனர் மற்றும் சாரதிகள் பின்பற்ற வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor