பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் ஏற்படும் நோய் அறிகுறிகள் குறித்த அறிவிப்பு!

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என சிறப்பு மருத்துவர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்துள்ளார்.

ஃபைசர் மூன்றாவது டோஸை செலுத்தும்போது, ​​கொரோனா போன்ற சிறிய அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை தோன்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உடல்வலி, தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இதுகுறித்து பயப்பட வேண்டாம் என்றும் தடுப்பூசியால் ஏற்படக்கூடிய சில அறிகுறிகளே இவையென்றும் சிறப்பு மருத்துவர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி உடலில் செயற்படுத்தப்படுவதால் அந்த சிறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor