பூலன் தேவி கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொள்ளைக்காரியாக இருந்து பின்னர் அரசியல்வாதியான பூலன் தேவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபருக்கு நேற்று வியாழனன்று ஆயுள் தண்டனை அளித்து டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு ரூபாய் 1லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டில் டில்லியில் பூலான் தேவியை சுட்டுக் கொன்றது தொடர்பாக செர் சிங் ராணா என்பர் குற்றவாளியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி அன்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார்.

phoolan_devi

ராணா என்ற அந்த நபர் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 302 (கொலை), 307 (கொலை முயற்சி) மற்றும் 34 என்பவையின் கீழ் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஏனைய 10 சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டனர்.

உத்திர பிரதேசத்தில் கொள்ளைக்காரராகத் திகழ்ந்து, பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகிய பூலன் தேவி குறித்து இந்தித் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.

தன்னை உயர்ஜாதி இந்துக்கள் கூட்டாக பாலியல் வல்லுறவு கொண்டதற்கு பழிவாங்குவதற்காக தான் ஆயுதம் எடுத்ததாக பூலன் தேவி கூறியிருந்தார்.

கடந்த 2001ஆம் 37 வயதான பூலன் தேவி, உத்திர பிரதேச மாநிலத்தின் மிர்ஸாபூர் என்ற தொகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து கொண்டிருந்தபோதுதான் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2001இல் ஜூலை மாதம் 25ஆம் தேதி அன்று மக்களவை கூட்டத்திலிருந்து மத்திய உணவிற்காக வீட்டிற்கு திரும்பியபோதே, தில்லி அஷோகா ரோடில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே வைத்து அவர் சுட்டு கொல்லப்பட்டார்.

Recommended For You

About the Author: Editor