புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவரின் படங்கள் காட்சிப்படுத்த தடை

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் படங்களை காட்சிப்படுத்த பெற்றோர், பாடசாலை மட்டத்திலோ பணஅறவீடுசெய்து காட்சிப்படுத்துவதை இந்த வருடத்திலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வியமைச்சு அவசரமாக சுற்று நிரூபமொ ன்றை நேற்று சகல கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

ஏதேனும் பாராட்டினை மேற்கொள்ள வேண்டுமாயின் அது ஏனைய மாணவர்களை பாதி க்காத வகையில் பாடசாலையினுள் அடங்கும் நிகழ்ச்சித் திட்டத்தினுள் மாத்திரம் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்தை கல்வியமைச்சின் செய்லாளர் டபிள்யு.எம்.பந்துசேன அனுப்பியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor