Ad Widget

புத்தாண்டில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது – அரசாங்கம்

தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு கொண்டாடப்படும் காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம்நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இந்த குழுநிலை விவாத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வெசாக் பண்டிகைக் காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாதிருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts