புதிய மின் கட்டணக் குறைப்பு அமுலாகப் போவது இப்படித்தான்!

மாதாந்தம் பெறப்படும் கட்டணப் பட்டியலின் அடிப்படையிலேயே 25 வீத மின்சாரக் கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பி.கனேகல தெரிவித்துள்ளார்.

w-p-kanekala-eb

தற்போது மின்சாரக் கட்டணம் நிலையான கட்டணம் மற்றும் எரிபொருளுக்கு செலவாகும் கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கியே தயாரிக்கப்படுகின்றது.

இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எதுஎவ்வாறு இருப்பினும் மின்சாரக் கட்டணம் புதிய முறைப்படி அனைவருக்கும் 25 வீதம் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக 100 ரூபா மின் கட்டணமாக விதிக்கப்படும் ஒருவருக்கு நூற்றுக்கு 25 வீதம் குறைக்கப்பட்டு 75 ரூபா கட்டணமாக அறவிடப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இன்று அல்லது நாளை வழங்கப்படும் கட்டணப் பட்டியல்களில் இந்த புதிய முறை இருக்காது எனவும், புதிய கட்டண முறையை அமுல்படுத்த இரண்டு வாரங்கள் ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.