புகைத்தலில் யாழ் மாவட்டம் முதலிடம்

Cigarette_smokeயாழ்.மாவட்டம் புகைத்தலில் முதலாம் இடத்தில் இருப்பதாக அண்மையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய போதைப்பொருள் புகைத்தலுக்கு எதிரான அமைப்பினால் மேற் கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் முதலாம் இடத்தில் யாழ் மாவட்டமும் இரண்டாம் இடத்தில் கொழும்பு மாவட்டமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 43 வீதமானவர்களும் கொழும்பு மாவட்டத்தில் 39 வீதமானவர்களும் புகைத்தலில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.