பிரேஸில் வாள்கள் யாழில் மீட்பு

brazil-swords-vaalபிரேஸிலில் தயாரிக்கப்பட்ட 5 வாள்களை யாழ். மாவட்டத்திலிருந்து அண்மையில் கைப்பற்றியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெறும் மாதத் தொடக்கத்திற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (08) யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,

‘பிரேஸில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 வாள்களை யாழில் அண்மையில் மீட்டுள்ளோம். அவை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், அந்த வாள்கள் யாரால், எங்கே, எப்போது கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. அது தொடர்பான புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மேலும், போதைப் பொருட்கள் இலங்கைக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றனவோ அவ்விதம், வாள்களும் கடத்தப்பட்டுக்கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.