பிரிட்டன் கடலில் மூழ்கி இலங்கைத் தமிழர்கள் ஐவர் உயிரிழப்பு!

பிரிட்டனின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கைத் தமிழர்கள் உயிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

five deth

இறந்தவர்களில் சகோதரர்கள் இருவரும் மேலும் ஒருவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

கடற்பரப்பில் உள்ள மண்திட்டியில் உதைபந்து விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் கடல் அலை அள்ளிச் சென்றதாகத் தெரிவிக்கபபடுகிறது.

ரவி நிதர்ஷன் (வயது 22), ஶ்ரீஸ்கந்தராஜா இந்துஷன் (வயது 23), நாதன் கோபி (வயது 22), நாதன் கெனிகன் (வயது 19) சிறிதவராஜா குருசாந்த்(வயது 27) ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.

வருடத்தின் உஷ்ணம் அதிகமான தினம் என பிரித்தானியாவில் வர்ணிக்கப்படும் இந்த நாளில் பொழுதுபோக்குக்காக கடற்கரைக்குச் சென்றபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

நேற்று கடலில் மூழ்கி காணாமல் போன மூன்று ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேரத்தின் பின்னர், மேலுமிரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன எனக் கூறப்படுகின்றது.

அத்தோடு, மேலுமொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஹெலிக்கொப்டரின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்பிராந்தியப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று வரையில், இங்கிலாந்து முழுவதும் கடலில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor