பிரான்ஸில் சவுதி இளவரசரின் வாகனத் தொடரணியை மறித்து கொள்ளை

பிரான்ஸில் சவுதி இளவரசரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கார்-தொடரணி ஒன்றை ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.

france-police

அவர்கள் மூன்று லட்சம் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பிரான்ஸ் காவல்துறை கூறுகின்றது.

‘இரகசியமான ஆவணங்கள்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களையும் அவர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சவுதி தூதரகத்திலிருந்து பாரிஸுக்கு வடக்காக அமைந்துள்ள விமானநிலையம் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோதே கடந்த ஞாயிறு இரவு இந்த வாகனத் தொடரணி இலக்குவைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor