விடுதலைப்புலிகளின் எழுச்சி நாட்கள் குறித்த துண்டுப்பிரசுரம்!! யாழில் பரபரப்பு!!

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பேரூந்து நிலையத்திற்குள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தேசிய அடையாளம் என பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஓட்டப்பட்டதால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

pirabakaran-note-1

pirabakaran-note-2

குறித்த துண்டுப்பிரசுரத்தில், பிரபாகரனின் உருவப்படமும் தேசிய அடையாளங்கள் என புலி மற்றும் வாகை மரத்தின் படங்கள் அடங்கியுள்ளதோடு, விடுதலைப்புலிகளின் எழுச்சி நாட்கள் குறித்த துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும், குறித்த பேரூந்து தரிப்பிடத்திற்குச் சென்ற பொதுமக்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் அங்கு சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும், குறித்த துண்டுப்பிரசுரங்களை அகற்றியுள்ளனர்.

இச் சம்பவத்தையடுத்து குறித்த பிரதேசத்தில் சில மணித்தியாலங்கள் இராணுவத்தின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor