பிரபாகரனின் கோரிக்கைகள் நியாயமானவை பொதுபலசேனா

பிர­பா­க­ரனின் கோரிக்­கைகள் நியா­ய­மா­னவை. ஆனால் அதற்­காக பின்­பற்­றிய வழி­முறை பிழை­யா­னது. அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என பொது­ப­ல­சேனா தெரி­வித்­தது.

ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார பட்டம் விடு­வதால் இனங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி விட முடி­யாது என்றும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­தது.

pothupalasena_a

கொழும்பில் நேற்று முன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற பொதுபலசேனாவும் அகில இலங்கை இந்து சம்மேளனமும் இணைந்து இனங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை நிறைவேற்றவுள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் பௌத்த, இந்து மதங்களைப் பாதுகாப்பதற்காக “பௌத்த, இந்து தர்மாரக்ஷன சபாவ” எனும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம் இரண்டு தரப்பும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படவுள்ளதாக ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

இங்கு தேரர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களின் தீர்­வுக்­காக பிர­பா­கரன் முன்­வைத்த கோரிக்­கைகள் நியா­ய­மா­னவை.

அதே­போன்று 1987 /89 களில் ஜே.வி.பி.யினர் முன்­வைத்த கோரிக்­கை­களும் நியா­ய­மா­னவை. ஆனால் தமது கோரிக்­கை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக இந்த இரண்டு தரப்­பி­னரும் பின்­பற்­றிய வழி­முறை பிழை­யா­னது.

அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. கோரிக்­கை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள ஆயு­த­மேந்­து­வது நாட்­டுக்கு எதி­ரான சட்­ட­வி­ரோத செய­லாகும். இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

பிரி­வி­னை­வாதம்

புலிகள் முழு­மை­யாக அழித்­தொ­ழிக்­கப்­பட்டு யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டது. ஆனால் உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் இன்றும் இலங்­கையில் பிரி­வி­னை­வா­தத்தை ஏற்­ப­டுத்தும் நகர்வு முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

பாதி­ரி­யாரின் உடை­க­ளுக்குள் இன்று பிரி­வி­னை­வா­தமும் மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ளது. இரா­யப்பு ஜோசப் இந்­துக்­களை கிறிஸ்­த­வர்­க­ளாக மதம் மாற்றி சர்­வ­தேச சக்­தி­களின் பிரி­வினை வாதத்­திற்கு உந்து சக்தி வழங்­கு­கின்றார்.

இனங்­க­ளுக்­கி­டையே மதங்­க­ளுக்கிடையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த கீழ் மட்டம் மத்­திய மற்றும் உயர் மட்டம் என பல்­வேறு மட்­டங்­களில் செயல்­வ­டிவில் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

சமூக ஒரு­மைப்­பாட்­டுக்­கென அமைச்சு உரு­வாக்­கப்­பட்டு அதற்கு அமைச்சர் வாசு தேவ நாண­யக்­கார நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஆனால் இந்த அமைச்­சினால் அதற்­கான ஆக்­க­பூர்­வ­மான எது­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­டு­வ­தில்லை.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து காலி முகத்­தி­டலில் அமைச்சர் வாசு பட்டம் விடு­வதால் இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியாது. நல்லிணக்கம் என்ற பட்டம் இன்று திசை திரும்பி பறந்து கொண்டிருக்கின்றது. அதனை சரியான திசைக்கு கொண்டு வரும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றார்