பின்லேடனை சுட்டது நானே – அமெரிக்க சிப்பாய் [படங்கள் இணைப்பு]

இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை அந்த நாட்டு உளவுத்துறைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மூன்று உலங்கு வானூர்தியில் வந்திறங்கிய அமெரிக்க படைகள் திடீர் தாக்குதலை நடத்தின . இதில் பின்லேடனை முன்னோக்கி சென்று அவரது நெற்றியில் மூன்று தடவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தவர் Rob O’Neill, 38 என்ற சீல் கடல் படையை சேர்ந்த சிப்பாய் ஆவார் தற்போது இவர் தனது முகத்தை மறைக்காது பின்லாடனை நானே சுட்டு கொன்றேன் என பகிரங்கமாக கூறி தனது புகைபடத்தினையும் வெளியிட்டுள்ளார் .

தற்போது இவர் ஐ எஸ் ஐஸ் எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட புறப்பட போகிறாராம் . இவர் தற்போது இரண்டாவது சில்வா ஸ்டார் என வர்ணிக்க படுவதுடன் ஒபாமா இவருக்கு நேரடியாக சந்தித்து தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார் .

கொலை செய்யப்பட்ட பின்லேடன் உடலம் கடலுக்குள் வீச பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது . இவரை இனி அல்கொய்தா விட்டு வைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது .

Osama-01

rob-o-naill1

rob-o-naill2

rob-o-naill3