பிக்குமாருக்கு சாணி வீசிய சிங்கள மக்கள்

ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர்கள் சிலர், இன்று வியாழக்கிழமை (02) முற்பகல், சுமார் 40 நிமிட நேர ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

விடுதி வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பிட்டிபன சந்தியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது இன்று அதிகாலை இனந்தெரியாதோர் சிலரால் சாணம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிக்கு மாணவர்கள் தெரிவித்தனர்.