பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

patheeneyamமஹிந்த சிந்தனையின் கீழ் மேற்கொள்ளப்படும் பார்த்தீனியம் அழிப்பு நடவடிக்கைகள் யாழ்.மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் ரீதியில் இன்ற காலை முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைவாக, கோப்பாய் (வலி.கிழக்கு) பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரதேச செயலர் ம.பிரதீபனின் நெறிப்படுத்தலில் ஜே – 260, ஜே – 261 கிராமஅலுவலர் பிரிவுகளில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சனசமூக நிலைய அங்கத்தவர்கள், விவசாய சம்மேளனத் உறுப்பினர்கள், 51 ஆவது படைப்பிரிவின் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து இந்தப் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் ஒரு கிலோ பார்த்தீனியம் 10 ரூபாய் என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor